ஜெர்ரி தாமஸ் என்பவர் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை
விவாதத்திற்கு அழைத்ததாகவும், யாரும் தன்னோடு விவாதம் செய்ய முன்வரவில்லை என்றும், குறிப்பாக ஜாகிர் நாயக் அவர்களை தான் விவாதம் செய்ய அழைத்து அவர் தன்னோடு விவாதம் செய்யாமல் ஓட்டமெடுத்து விட்டார் என்றும் அதற்கான ஆதாரங்களோடு தான் ஜாகிர் நாயக்கிற்கு விவாத அழைப்பு விடுத்து அவர் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடிய செய்தியையும் கடித ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த இடத்தில் ஜெர்ரி தாமஸ் என்ற இவர் விவாதம் செய்கின்றேன் என்ற பெயரில் கூத்தடிக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, ஜெர்ரி தாமஸ் என்பவரது பாஷையில் விவாதம் செய்வதென்பது என்னவென்றால், ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; அந்த குறிப்பிட்ட தலைப்பில் இவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவாராம்; நாம் ஒரு மணி நேரம் உரையாற்ற வேண்டுமாம்! இந்த இரண்டு மணி நேரத்தோடு விவாதம் முடிவடைந்து விடுமாம். என்னே அற்புதமான விவாத வழிமுறை(?). இந்த பாணியில் விவாதம் செய்ய இவர் அழைத்த விவாத அழைப்பையும் கூட ஜாகிர் நாயக் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஏனெனில் குர் ஆன ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களால் மட்டுமே இவர்களுடன் விவாதம் செய்ய முடியும். கொள்கை சரி இல்லாமல் எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் விவாதம் செய்ய மறுத்து ஓட்டம் பிடிக்கத் தான் செய்வார்கள்.

