பதிவுகளின் பட்டியல்...

Thursday, April 21, 2011

பயங்கரவாதம் – வன்முறை மற்றும் பைபிள்!

பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.
கிறிஸ்தவர்களில் சிலர், முகம்மது (ஸல்) அவர்கள் வன்முறையைப் போதித்ததாகவும் இயேசு அகிம்சையையும் அன்பையும் போதித்ததாகவும் ஒப்பீட்டுப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதற்கு மாறாக இயேசுதான் வன்முறையைப் போதித்தார் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இயேசுவும் முஹம்மதுவும் (அவர்கள் மீது இறையருள் உண்டாகட்டும்) தார்மீக வழிகாட்டுதல்களுடன் அனுப்பப்பட்ட இறைவனின் அடியார்களும் தூதர்களும் ஆவார்கள். அவர்கள் இருவரிடையே வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடாகும்.
இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் பொய் மார்க்கம் என்றும் கிறிஸ்தவம் தான் படைத்தவனின் உண்மையான வழிகாட்டுதல் – மார்க்கம் என்றும் நிறுவதற்காகவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனில், அவற்றிற்குச் சரியான பதிலளிப்பதும் உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதும் முஸ்லிம்களின் மீது கடமையாகிறது!
இஸ்லாம் வன்முறை – பயங்கரவாத மதம் என சாதாரண மக்களை ஏமாற்ற முயலும் இத்தகையவர்கள், தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் “மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்” உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.
மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரைவிட மேலாக மதிக்கக் கூடிய, ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உட்பட்ட ஆன்மீகத் தலைவரை ஒற்றை வார்த்தையில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கேவல விமர்சனம் செய்வதன் மூலம் தம்மை விட மதவெறி பிடித்தவர்கள் வேறுயாரும் இல்லை என்பதையும் வெளிக்காட்டியுள்ளனர்.
பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.
தாங்கள் செய்த/செய்யும் அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் தாங்கள் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது புரோகித வர்க்கம். இதற்காக இவர்கள் இறைவனால் தூதர்களாக தேர்வு செய்யப்பட்ட தீர்க்கதரிசிகளின் பெயரிலும் கையாடல்கள் செய்வதற்கும்த் தயங்கவில்லை. இதனால் தான் வேதம் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பைபிள், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. ஒருபுறம் தங்களை அமைதிப் புறாக்களாகக் காட்டும் கிறிஸ்தவர்கள், திரைமறைவில் செய்து வரும் வேலைகளைக் குறித்து பலரும் அலட்சியமாகவே இருக்கின்றனர். மிஷினரிகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்வர்
ஆபாசம், வன்முறை, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், பொய்கள் என அசிங்கக் குப்பைகள் நிறைந்துக் கிடக்கும் பைபிளில், புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட அதனை வேதமாகக் கருதும் கிறிஸ்தவர்களே பின்பற்றுவதில்லை என்பது முரண்பாட்டின் உச்சகட்டம்!
"பன்றி மாமிசம் உண்ணக் கூடாது" என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இதுகுறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக்கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!
"மதுபானம் அருந்தாதீர்கள்" என்று பைபிள் உபதேசம் செய்தாலும் அந்தத் தீமையை தீர்க்கதரிசிகளே செய்து வந்தார்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூட கல்யாண விருந்தில் அதை பரிமாறியிருக்கிறார் என்று புரோகிதர்கள் எழுதி வைத்துள்ளதால் இது குறித்தும் தார்மீக வழிகாட்டுதல் இல்லாமல் பாஸ்டர் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதும் கிறிஸ்தவத்திலேயே நடக்கின்றன.
"நீ திருமணம் முடிக்காதவனாக இருந்தால் (திருமணம் முடிக்க) பெண்ணைத் தேடாதே! திருமணம் முடித்திருந்தால் உன் மனைவியை விட்டுவிடாதே" என்று திருமணம் முடித்தல் பாவமா? நன்மையா? என்ற தெளிவான வழிகாட்டுதலை வழங்க பைபிள் தவறியதால் திருமணம் செய்யாமல் உணர்வுகளையும் அடக்க இயலாமல் சன்னியாசம் சென்று பாதி வழியில் வழிதவறி வருபவர்களும் கிறிஸ்தவர்களே!
தலைகுனிந்து ஆசீர்வதித்து அமைதிப்புறாவாக மக்களிடம் காட்சியளித்த அன்றைய போப்பும் கிறிஸ்தவ புரோகிதர்களும்தான் சிலுவை யுத்தம் இறையாட்சியை பூமியில் உருவாக்கும் புனிதப் போர் என்று சிலுவை யுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து இலட்சகணக்கில் மனிதர்களைக் கொன்றொழித்த மாபாதச்செயலைச் செய்தன.
பைபிளின் மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜார்ஜ் புஷ் என்ற கிறிஸ்தவர் தான், ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்யுமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக அறிக்கை விட்டார். ஈராக்கில் நசுக்கப்பட்ட இலட்சகணக்கான பிஞ்சுக் குழுந்தைகளும் பலவீனமான பெண்களும் முதியவர்களும் புஷ்ஷின் பார்வையில் இறைவனுக்காக பலியிடப்பட்டவர்கள்!
பைபிள் உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா என்று ஆராய்ந்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன. எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட பயங்கரமான செயல்களையெல்லாம் செய்யவேண்டியது இறைகட்டளையாகவே பைபிளில் உள்ளன என்று கூறினால் பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுவது இயல்புதான். எனினும் அதுவே உண்மை.
பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் தோண்டப்படும்!

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah