தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட பெரிய கடை வீதி கிளையின் சார்பாக
19.06.2011 அன்று காலை 9.00 மணிக்கு நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் வைத்து
திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் மற்றும் லோட்டஸ்
கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்
நடைப்பெற்றது.இம்முகாமிற்கு கிளை தலைவர் A.சலீம் அவர்கள் தலைமை
தாங்கினார்கள்.மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான் முன்னிலை வகித்தார்.இம்முகாமில் 45
பேர் இரத்த தானம் செய்தார்கள். திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்
dr.பிரியா விஸ்வம் ஸ்டாப், நர்ஸ் காயத்திரி ,செல்வமணி மற்றும் லேப் டெக்னிசியன்
அனிதா, ஊழியர் காளிமுத்து ஆகியோர் கலந்துகொண்டார்கள்.இம்முகாமில் 148 பேர் கண்
பரிசோதனையில் கலந்து பயன்பெற்றர்கள்.இதில் 8 பேர் கண் ஆபரேசனுக்கு தேர்வு
செய்யபட்டார்கள்.இம்முகாமில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் சார்பாக மருத்துவர்
dr.சுந்தர மூர்த்தி மற்றும் பொறுப்பாளர் ஜெகநாதன் மற்றும் மருத்துவ
குழுவினர்கள் கலந்துகொண்டார்கள்posted by SM.YOUSUF
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah