பதிவுகளின் பட்டியல்...

Wednesday, June 29, 2011

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் _28062011

DSC03031கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.

DSC03035
DSC03033உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

posted by SM.YOUSUF

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah