இறைவனின் திருபெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர,சகோதரிகளே!
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். விபரம் இந்த பாதிப்பு ஏற்பட்டவுடன் திருப்பூர் பகுதியில் இருந்த அனைத்து அமைப்புகளும் களத்தில் இறங்கி வேலைகள் செய்தது எந்த ஒரு அமைப்பும் குறை சொல்ல இயலாத அளவு தங்களால் இயன்ற அளவு வேலைகளை செய்தனர் எனபது குறிப்பிடத்தக்கது இந்த பெரும் வெள்ள விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு அனைத்து ஜமாத்தும் இணைந்து அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது .
இதில் குர்ஆன்,ஹதீஸ் சரியாக சொல்வதால் நம்மை அவர்கள் அழைக்கவில்லை. என்றாலும் நமது கொள்கைக்கும் உறுதிக்கும் அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருளால் பாதிக்கப்பட்ட மக்களை உடனுக்குடன் சென்று சந்தித்து அவர்களுக்கு உடன்
தேவைப்பட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அண்ணாநகர் எனும் பகுதியில் சென்று அந்தப்பகுதியில் சேரும் சகதியுமாக இருந்த வீடுகள் முதற்கொண்டு சென்று சுத்தம் செய்யப்பட்டது. அவர்களுக்கு உணவு,தேனீர்,பிஸ்கட் போன்றவை புதன் இரவு வரை வழங்கப்பட்டது மேலும் அவர்களுக்கு அதியாவிஷய பொருட்களான பாய்,பத்து நாட்களுக்குரிய மளிகை பொருட்கள், சிலருக்கு ஸ்டவ் உட்பட வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பல வீடுகள் பாதிப்படைந்தது, அதேபோல் தொழில் செய்யும் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பலரின் உற்பத்தி பொருட்கள் பெரிய அளவில் சேதம் அடைந்தது. அரசாங்கம் உட்பட அனைவரின் கவனமும் வீடுகளில் பாதிக்கப்பட்டவர் பக்கமே இருந்தது. நாம் அவர்களை மட்டும் கவனத்தில் எடுத்துகொள்ளாமல் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளையும் கவனத்தில் கொண்டது. முதற்கட்டமாக வீடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. CLICK அதன் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட சிறு உற்பத்தியாளர் மற்றும் சிறு வியாபாரிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுகிழமை (27.11.2011) அன்று நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah