TNTJ திருப்பூர் மாவட்டதலைமையின் சார்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கிளை நிர்வாகிகளுக்கான நிர்வாகவியல் பயிற்சி முகாம் தாராபுரம் ஹாஜியான மண்டபத்தில் 15.01.2012 நடைபெற்றது. பயிற்சி முகாமில் மிகசரியாக காலை 7.00 மணிக்கு முதல் அமர்வு தொடங்கியது. முதல் அமர்வில் சகோ H.M அஹ்மத் கபீர் அவர்கள் பயிற்சியளித்தார்.துவா மனனம் செய்வது பற்றி பயிற்று வித்தார் வந்திருந்த கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் துவா மனனம் செய்து முதல் அமர்வில் காலை உணவு இடைவேளை காலை 8.மணி முதல் 9 மணி வரை இடைவேளை தரப்பட்டது உணவு இடைவேளைக்கு பின் 9 மணிக்கு இரண்டாம் அமர்வில் கொள்கை உறுதி பற்றி நிர்வாகிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாம் அமர்வு சரியாக 10.45 மணிக்கு நிறைவுற்று தேனீர் வழங்கப்பட்டது. மூன்றாம் அமர்வு 11.00 மணிக்கு சகோ M.S சுலைமான் அவர்கள் பயிற்சி முகாமை துவக்கினார், பயிற்சி முகாமில் கிளை நிர்வாகிகள் மாணவர்களாகவும் பயிற்சி முகாமை நடத்துபவர் ஆசிரியராகவும் நடத்தப்பட்டனர். நிர்வாகிகளுக்குள் தகவல் தொடர்பு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது கேள்விகளின் வாயிலாகவே கிளை நிர்வாகிகள் தெளிவு பெரும் வகையில் பயிற்சி அமைந்திருந்தது மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பிற்குரியதாகவும் அமைந்தது. மாவட்ட தலைமைக்கும் கிளை நிர்வாகிகளுக்கும் தகவல் தொடர்பு எப்படி இருக்க வேண்டும் கிளை நிர்வாகிகளுக்குள் தகவல் தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் தகவல் தொடர்பு சரியாக அமையவில்லை எனில் ஏற்படக்கூடிய நிர்வாக சிக்கல் குறித்து நிர்வாகிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது அதை கொண்டே அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக பயிற்சி அமைந்தது. கேள்விகள் மூலமாகவே நிர்வாக சிக்கல் மற்றும் நிர்வாக குளறுபடிகளை நிர்வாகிகள் புரிந்து கொள்ளும்படி அமைந்திருந்தது. நிர்வாகிகள் வெளியூரிலிருந்து இரவே புறப்பட்டு வந்தவர்களும் அதிகாலை புறப்பட்டு வந்தவர்களும் சோர்வுடன் காணப்பட்டனர். பயிற்சி முகாமில் கேள்விகள் மூலம் தெளிவு பெற ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு நிர்வாகிகளை சோர்வு நீங்கி புத்துணர்வு பெற வைத்தது . மூன்றாம் அமர்வு சரியாக மதியம் 1.00 மணிக்கு நிறைவு பெற்றது. மதிய உணவு மற்றும் தொழுகைக்கான இடைவேளை 1.00 TO 2.00 மணிவரை விடப்பட்டது இடைவேளை முடிந்து நான்காம் அமர்வு மதியம் 2.00 மணிக்கு சரியாக ஆரம்பிக்கப்பட்டு கேட் மூடப்பட்டது தாமதமாக வந்த கிளை நிர்வாகிகளிடம் நேரம் தவறாமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது மற்றும் தொழுகையின் அவசியம் குறித்தும் அதனால் இழக்கும் நன்மைகள் குறித்தும் குரான்,ஹதீஸ் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF
No comments:
Post a Comment