காதியானிகளும் முஸ்லிம்களே, நபி (ஸல்) அறிவிப்பு என்ற தலைப்பில் காதியானிகளால் நேற்று (27.05.2012) தினத்தந்தியில் விளம்பரம் செய்யபட்டு இருந்தது. எனவே இதனை அறிந்த கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனைத்து பத்திரிக்கைகளுக்கும் பத்திரிக்கை செய்தி அனுப்பியது. தினத்தந்தியில் வெளியான விளம்பரமும் இணைக்கப்பட்டு உள்ளது.
பத்திரிக்கை அறிக்கை
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் நபியவர்கள் இறைவனின் தூதர் ஆவார் என்ற கொள்கையை கொண்டது தான் இஸ்லாமிய மார்க்கம். இதை மொழிபவரும் நடைமுறைபடுத்துபவரும் மட்டுமே முஸ்லிம்கள் ஆவார்கள்.
அப்படி இருக்கையில் காதியானிகள் என்ற ஒரு கூட்டம், நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைவனின் தூதராக ஒருவர் வந்து விட்டார் என்று மிர்ஸா குலாம் என்பவனை தூதராக அறிவித்து உள்ளார்கள். இதன் காரணமாக அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பின் எந்த தூதரும் வர மாட்டார் என்ற இஸ்லாமிய கொள்கையை நிராகரித்து காதியானி என்ற புதிய மதத்தை தோற்றுவித்துள்ளார்கள்.
அவர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும், அதன் கொள்கைக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள்(காதியானிகள்) இஸ்லாமியர்களும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே இவர்கள் இஸ்லாத்தின் பெயரை சொல்லி வெளியிடும் எந்த செய்தியையும் இஸ்லாமியர்கள் சொன்னதாக பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையும் சுட்டிக் காட்டுகிறோம்..
இவண்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம்.
தொடர்புக்கு:-9150122377,9150030398,
9150164242,9244642002
Thanks to tntjcovai
தினத்தந்தியில் வெளியான விளம்பரம்
உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் ஷரியத் பாதுகாப்பு பேரவை தீர்மானங்கள்
posted by SM.YOUSUF
No comments:
Post a Comment