தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து நேற்று 07.10.12 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட மாணவரணி செயளாலர் சகோ.S.ஷாஹிது ஒலி அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயளாலர் சகோ.பஷீர் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் ”இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எப்படி அறிமுகப்படுத்துவது”என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வது குறித்து பயிற்சி வழங்கினார்.அவரை தொடர்ந்து மாநில பேச்சாளர் சகோ.K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் ”நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை சொல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் பிற இயக்கத்தை சார்ந்தவர்கள் எடுத்து வைக்கும் கேள்விகளை எப்படி தர்க்கரீதியாக எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கினார்.இத்ல் 70 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
POSTED BY மாணவரணி SHAHID
No comments:
Post a Comment