Tuesday, December 25, 2012

இஸ்லாம் ஒர் இனியமார்க்கம் _ உடுமலை _23122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற்ற "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சியில்
ஏராளமான பிறமத மற்றும் பிறகொள்கை சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு அவர்களின் இஸ்லாம் மார்க்கம் குறித்த
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு
சகோ.பக்கீர் முஹமது அல்தாபி அவர்கள் ,
தெளிவான பதில் மூலம் சத்திய இஸ்லாத்தினை எடுத்துரைத்தார்.
 இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய
சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.


கலந்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு "இஸ்லாம்கூறும்கடவுள்கொள்கை " ,யார் இவர்?
ஆகிய துண்டு பிரசுரங்கள் , 
"அறிவை இழப்பதற்கா ஆன்மிகம் ",யார்கடவுள்?  மற்றும்  "மனிதன் கடவுளாக முடியுமா?" ஆகிய DVD கள் ,
 மற்றும் "மாமனிதர் நபிகள் நாயகம் " புத்தகம் வழங்கப்பட்டது.

உடுமலை கிளை சகோதரர்கள் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சி  
TNTJ web master சகோ.S.M.அப்பாஸ் அவர்களால் onlinepj.com இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால்,
உலகமெங்கும் ஏராளமானோர் கண்டு பயன்பெற்றனர்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் உள்ளூர் கேபிள் டிவியில்
நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

1 comment:

சத்திய பாதையில் லட்சிய பயணம் said...

எல்லாப்புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே