இறைவனின் திருப்பெயரால்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-தின்
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார விதிமுறைகள்
நடைபெறவிருக்கும்
2014 நாடாளுமன்றத்
தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிப்பது
என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு எந்த ஒரு தனி நபரையோ அல்லது கட்சியையோ முன்னிறுத்தி அமையாது.
சமுதாய நலனை மட்டுமே கருதி முடிவெடுக்கும்.
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 3.5
சதவிகித இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான
முயற்சியை அதிமுக அரசு செய்துள்ளதால்,
இந்தத்
தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின்போது
சமுதாயத்தின் நலனையும், கண்ணியத்தையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்
கட்டுப்பாட்டையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் நம்முடைய பிரச்சார
முறைகள் அமையவேண்டும் என்பதற்காக பின்
வரும் வழிமுறைகள் வழங்கப்படுகிறது.
இதற்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகம் தலைமைப் பணிக்குழு உறுப்பினர்களாக
கீழ்க்கண்ட நபர்களை நியமனம் செய்துள்ளது. அதுபோல் தேர்தல் பணிகள் செய்வதற்கு
அனைத்துத் தொகுதிகளுக்கும் பணிக்குழு உறுப்பினர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவிலான தேர்தல் பிரச்சாரப் பணிகளை தலைமைப் பணிக்குழு
கண்காணித்து, வழி நடத்தும்.
தேர்தல் பணி
சம்பந்தமாக அதிமுகவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்கள் சந்திக்கும் வேளையில்
தனி நபராக சந்திக்கக்கூடாது. தேர்தல் பணிக்குழுவைச் சார்ந்த அனைவருமோ அல்லது
குறைந்தது மூவரோ சந்திக்க வேண்டும். இந்த
விஷயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகக் கடுமையாக நடந்து கொள்ளும்.
பிரச்சாரத்தின்போது
ஏற்படும் அனைத்து வரவு செலவுகளையும் தேர்தல்
முடிந்த பத்து நாட்களுக்குள் (மே,04,2014)
தலைமைக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதில் பணிக்குழுவினர்
அனைவரும் கையொப்பமிட வேண்டும்.
தேர்தல்
பணி சம்பந்தமாக அனைத்து செயல்பாடுகளும் செலவுகளும் தேர்தல் பணிக்குழுவின் கூட்டு ஆலோசனை
மற்றும் முடிவுகள் அடிப்படையில் இருக்க
வேண்டும். தேர்தல்
பணிக்குழுவிற்கான அனைத்து செயல்பாடுகளும் தனி மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட
வேண்டும்.
மாநிலத்
தலைமையால் ஒவ்வொரு தொகுதிக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு மட்டுமே முடிவுகள்
எடுத்து வழி நடத்திச் செல்லும். இவ்விஷயத்தில்
மற்ற நிர்வாகிகள் பணிக்குழு உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு
தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழுவினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
நியமிக்கப்படுவார்கள். அத்தொகுதி வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்பு
கொள்வதற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இவர்கள் மட்டுமே
அங்கீகரிக்கப்படுவார்கள்.
பிரச்சார
முறைகள்
1.துண்டுப்
பிரசுரங்களில் வேட்பாளர் பெயர் இடம் பெறலாம். ஆனால் வேட்பாளர் புகைப்படம் இடம்
பெறலாகாது. இரட்டை இலை சின்னம் மட்டுமே இடம் பெறவேண்டும். வேறு எதிலும்
வேட்பாளர் உட்பட எவருடைய புகைப்படங்களும் இடம் பெறுதல் கூடாது.
2.நமது
பிரச்சாரத்தின்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொடி மட்டுமே பயன்படுத்தப்பட
வேண்டும்.
3. நாம் ஆதரிக்கும்
கட்சியை அடையாளம் காட்டும் விதமாக அதிமுக கட்சியின் கொடி மற்றும் சின்னம் மட்டும்
தேவையான அளவு பயன்படுத்திக்
கொள்ளலாம்.
கூட்டணி/ஆதரவு கட்சிகளின் கொடிகள் எவற்றையும் பயன்படுத்தக்கூடாது. அதிமுக கட்சி
நடத்தும் பிரச்சாரங்களில் நமது கொடிகளை அவர்கள் பயன்படுத்தலாம்.
4.தனிமேடையில்
பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட
நமது மேடைகளில் வேட்பாளருடன் அதிகபட்சமாக அக்கட்சியைச் சேர்ந்த இருவர் மேடை ஏறலாம்.
5. பொன்னாடை போர்த்துதல், வணங்குதல், வாழ்க வளர்க கோஷங்கள், பேண்டு வாத்தியங்கள், தாரை தப்பட்டை அடித்தல், நடனம் ஆடுதல் ஆகிய செயல்களை நமது கூட்டத்திற்கு வரும் மக்கள்
விரும்ப மாட்டார்கள் என்பதை முன்கூட்டியே வேட்பாளரிடம் தெரிவிக்க
பணிக்குழுவினருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
6. இஸ்லாத்திற்கு
உட்பட்டு, யாரையும்
வறம்புமீறிப் புகழவோ அல்லது இகழவோ
வேண்டாம் என வேட்பாளருக்கு அறிவுத்துதல் வேண்டும். நம்முடைய அனைத்து வகையான தேர்தல் பணிகளும்
தனித்தே செயல்படவேண்டும். தேவைக்கேற்ப வேட்பாளரையோ அல்லது அதன் பிரதிநிதிகளையோ
நமது பிரச்சாரத்தின்போது பயன்படுத்திக்
கொள்ளலாம். அரசியல் கட்சிகளின் எந்த நிகழ்ச்சிகளிலும் நமது உறுப்பினர்கள் கலந்து கொள்ளக்கூடாது
என்கிற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை விதி எந்த நிலையிலும்
மீறப்படக்கூடாது.
7.பிரச்சாரத்திற்குத்
தேவையான ஏற்பாடுகளை செய்து தருவது வேட்பாளரைச்
சார்ந்தது..அப்படி ஏற்பாடு செய்து தராமல் பணமாகத் தரும் பட்சத்தில் அவற்றை சரியானபடி
பயன்படுத்தி முறையாக அவர்களிடம் கணக்கை ஒப்படைக்க வேண்டும். தலைமைக்கும் அதன்
நகலை அனுப்ப வேண்டும்.
8. இஸ்லாம் தடை
செய்துள்ள ஆடம்பரம். வீண் விரையம் ஆகியவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
9. பிரச்சாரத்தின்போது
அச்சிடப்பட்ட பிரசுரங்கள், கூட்டங்கள் நடத்தும்போதும், வாகனப் பிரச்சாரத்தின்போதும்
எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வவுச்சர்கள் என
ஆதாரத்துடன், தேர்தல் முடிந்தபின்
வேட்பாளரிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
15. தவ்ஹீத் ஜமாஅத்தின்
பெயரை தவறாகப் பயன்படுத்தி, மக்களுக்கு மத்தியில்
குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்களோ, அமைப்புகளோ அப்பகுதியில் இருப்பார்களேயானால், அவர்களோடு இணைந்து தேர்தல் பணி செய்ய இயலாது என்பதனை வேட்பாளருக்குத்
தெரிவித்தல் வேண்டும். இதை மீறும்பட்சத்தில்
அவ்வேட்பாளருக்கான அனைத்துப் பிரச்சாரங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று
பணிக்குழுவிற்கு அறிவுறுத்தப்படுகிறது.
தலைமை
தேர்தல் பணிக்குழு:
1)ரஹ்மத்துல்லாஹ்(பணிக்குழுத்தலைவர்)
2)முஹம்மது
யூசுஃப் (து.பொ.செ)
3)தவ்ஃபீக்(தணிக்கை
குழு)
4)முஹம்மது
சாதிக்(மா.செ)
5)அப்துர்ரஹீம்(மா.செ)
6(அப்துர்
ரஹ்மான்(மா.செ)
7)தொண்டி
சிராஜ்(மா.செ)
8)பத்ருல்
ஆலம்(மா.செ)
9)நெல்லை
யூசுஃப் அலி(மா.செ)
……tntj -மாநில தலைமையகம்
No comments:
Post a Comment