Thursday, April 17, 2014

திமுக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர்மாவட்டம்


2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு எந்த ஒரு தனி நபரையோ அல்லது கட்சியையோ முன்னிறுத்தி அமையாது. சமுதாய நலனை மட்டுமே கருதி முடிவெடுக்கும்.


கடந்த 17.04.2014  அன்று  திமுக திருப்பூர் மாவட்ட செயலாளர். மு.பெ.சாமிநாதன் தலைமையில் திமுக நிர்வாகிகள்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‬ திருப்பூர் மாவட்ட மர்கஸ் க்கு வருகை தந்து,  நமது மாவட்ட  நிர்வாகிகளை சந்தித்தார்கள்.

திமுக விற்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய கேட்டுக் கொண்டனர்.  
இதில் TNTJ திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன், திருப்பூர் மாவட்டசெயலாளர்  சகோ.ஜாகிர் அப்பாஸ், மற்றும் மாவட்ட பொருளாளர். சகோ.முஹம்மது சலீம்  அவர்கள் நமது தேர்தல்பணிகள் மற்றும் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு உட்பட்டு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கினார்கள்.

பிறகு அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் (2), மாமனிதர் நபிகள் நாயகம்(2), மனிதனுக்கேற்ற மார்க்கம் (2) ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!

இதில் நமது ஜமாஅத் மாவட்ட, கிளை நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

No comments: