
அல்குர்ஆன் 18: 93. முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்.
94. "துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ்451 என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?'' என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர்.
95. "என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்'' என்றார்.
96. (தனது பணியாளர்களிடம்) "என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!'' என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது "ஊதுங்கள்!'' என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். "என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்'' என்றார்.
97. அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது.
98.
இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன்
தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.374
இவ்வசனத்தில்
(18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர்
இறைத்தூதரா? இறைத்தூதராக இல்லாத நல்ல மனிதரா என்பதில் அறிஞர்களிடையே
கருத்து வேறுபாடு உள்ளது.
யஃஜூஜ்,
மஃஜூஜ் எனும் கூட்டத்தினருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை
ஏற்படுத்திய துல்கர்னைன், இத்தடுப்பு யுகமுடிவு நாள் வரை நிலைத்திருக்கும்
எனவும், யுகமுடிவு நாள் ஏற்படும் போது தடுப்பு தூள்தூளாக்கப்பட்டு யஃஜூஜ்,
மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியே வருவார்கள் என்றும் கூறுகிறார்கள்.
இவ்வாறு
இறைத்தூதரால் தான் கூற முடியும். எனவே துல்கர்னைன் இறைத்தூதர் என்று கூறும்
அறிஞர்கள் இவ்வசனத்தை அதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah