மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?
கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் 32 பற்களும் தெரிய சிரிக்கிறார் சமுதாய மானம் காக்க புறப்பட்ட ஒரு சமுதாய தலைவர். கேவலம்3 சீட்டு கொடுத்ததற்கே இந்த சிரிப்பு என்றால் கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருந்தால் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசிவாங்கியதைப் போல ஆசி வாங்கியிருப்பார் போலத் தெரிகிறது. முதலில் 15தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து விட்டு அதிலே 12 சீட்டு கேட்டார்களாம். பிறகு 12ல் இருந்து குறைத்து 7 க்கு வந்தார்களாம். அப்பறம் இன்னும் கொஞ்சம் குறைத்து 5க்கு வந்தார்களாம். அப்புறம் விடாப்புடியாக 5 தொகுதிதான் வேண்டும் என சிறுபிள்ளைகள் அடம்பிடிப்பது போல தரையில் உருண்டு புரண்டு அடம்பிடித்தார்களாம். ஆனால் இவர்களின் அழுகுரல்களைக் கேட்டு கொஞ்சம் கூட மனமிறங்காத கருணைத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தா 3 தான் தருவேன் என ரொம்ப கறாராய் சொல்லி விட்டாராம்.
யார்கிட்ட உட்றீங்கானும் ரீலு? ஏற்கனவே 2 சீட்டு வாங்குறது தான் சமுதாய மானம் என சொல்லி கலைஞரிடம் உங்கள் மாப்பிள்ளை மிடுக்கை காட்டினீர்கள். அவரும் உங்கள் பலத்தை நினைத்து பயந்து பயந்து ஒரு சீட்டு தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த ஒரு சீட்டில் யார் போட்டிடுவது என கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்,நிரந்தர பொதுச்செயலாளருக்கும் குடுமிபிடி சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக 2 சீட்டாவது தாங்க என மறுபடியும் போய் கதவைத் தட்ட அவர்கள் உங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச்சாத்தி விட்டார்கள். அதற்குபிறகு தான் உங்களின் தனிபலத்தை நிறுபித்தீர்கள். அதாவது உங்கள் இயக்கத்திற்கு எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் நீங்கள் வாங்கிய வாக்கு வங்கியின் மூலம் அம்பலமாக உங்கள் நிலை கண்டு சிரிக்காதவர்கள் யாருமில்லை.
இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் இப்போது கூட்டணி சேர்ந்து கொண்டு இப்போது கொடுத்த 3 சீட்டை இப்படி கேவலமாக பல்லிளித்து வாங்கிக் கொண்டு போஸ் கொடுக்கிறீர்கள். இதுல வேற அண்ணன் பன்னீர் செல்வம் கையப் புடிச்சிக்கிட்டு கெஞ்சினாராம். அம்மாவைப்பத்தி தெரியாதவர்களிடம் வேண்டுமானால் உங்களின் கும்மாஞ்சி வேலைகள் பலிக்கும். கருணாநிதி வேண்டுமானால் இழுவை போட்டுப் பார்ப்பார். ஆனால் ஜெயாவைப் பொருத்தவரை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என ஒரே போடாக போடக்கூடியவர் எனபது எல்லாருக்கும் தெரியும். வேனுமினா 3 சீட்ட வாங்கிக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நடையைக்கட்டுங்கள் என அம்மா சொல்லியிருப்பார். உடனே கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தர பொதுச்செயலாளருக்கும் போட்டியிட 2 சீட்டு கிடைத்தால் போதும் என்ற ரீதியில் நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருப்பீர்கள். காரணம் உங்கள் சிரிப்பே ஆயிரம் கதை சொல்கிறது தலைவரே!
மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன் என்று தமுமுகவின் தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு சால்ஜாப்பு சமாளிப்பு பதில்கள் அவர்கள் தளத்தில் இருக்கிறது. ஆனால் உண்மையாக இந்த கேள்விகளுக்கு அவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனையான பதில்கள் இதோ.
கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..
கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..
நன்றி: ஃபித்னா.காம்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah